உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா சமையல் போட்டியில் 81 வகை உணவுகள் தயாரிப்பு

மா சமையல் போட்டியில் 81 வகை உணவுகள் தயாரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடக்கும், 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி மைதானத்தில் மாங்கனியை அடிப்படை பொருளாக கொண்டு இனிப்பு, காரம், பானம், சிற்றுண்டி போன்ற உணவு வகைகளை தயார் செய்யும் சமையல் போட்டி நடந்தது. இதை கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டு உணவுகளை சுவைத்து, சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தார். இதில், 9 குழுக்களை சேர்ந்த மகளிர், பொதுமக்கள் மாம்பழங்களை வைத்து, சமாய் அல்வா, பர்பி, முக்கனி பாயாசம், கைரி சாதம், புளி குழம்பு, பச்சடி, சாலட், மாங்கா சாதம், மாங்கா சட்னி, ஜெல்லி, சர்பத், மாங்கா தயிர், மாங்கா பஜ்ஜி, உள்ளிட்ட, 81 வகையான உணவுகளை சமைத்தனர். இதில் முதல், 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை