உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் தீப்பிடித்து எரிந்த பொக்லைன்

சாலையில் தீப்பிடித்து எரிந்த பொக்லைன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த மாதேப்பள்ளியில் இருந்து வேப்பனஹள்ளி நோக்கி நேற்று காலை ஒரு பொக்லைன் சென்றது. நாடுவனப்பள்ளி அருகே, சாலையோரம் சென்றபோது இன்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. பொக்லைனை ஓட்டி சென்ற பழனி என்பவர் குதித்து தப்பினார். சிறிது நேரத்தில் பொக்லைன் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் பொக்லைன் முற்றிலும் எரிந்து நாசமானது. வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ