அறுந்து விழுந்த மின்கம்பி
அறுந்து விழுந்த மின்கம்பிதர்மபுரி, அக். 9-தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 29வது வார்டு சூடாமணிதெருவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலையோர மரக்கிளைகள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. இதை கண்ட மக்கள் தகவலின்படி மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று அறுந்து கிடந்த மின்கம்பிகளை அகற்றி மின் வினியோகத்தை சீர்செய்தனர்.