மேலும் செய்திகள்
பத்மாபுரம் ரேஷன்கடைக்கு செல்ல பாதை வசதி அவசியம்
23-Nov-2024
ரேஷன் கடைக்குள்விற்பனையாளர் விபரீத முடிவுஓசூர், நவ. 24-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காந்தி சாலையை சேர்ந்தவர் ஸ்ரீதர், 55. உளிமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார்; மேலும் பேளூர், மருதனப்பள்ளி, பஜ்ஜேப்பள்ளி ஆகிய பகுதி நேர ரேஷன் கடையிலும், பொருட்கள் வழங்கி வந்தார். கடந்த, 19ல் ஸ்ரீதர் மாயமான நிலையில், அவரது மனைவி லதா, 45, மகன் தாசன், 25, மகள் அர்சிதா, 22, ஆகியோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்து வந்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று ரேஷன் பொருட்கள் வாங்க பேளூர் கடைக்கு மக்கள் சென்றனர்.கடைக்குள் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், உடல் அழுகி ஸ்ரீதர் சடலம் காணப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான், ஸ்ரீதர் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதனால் அவருக்கு கடன் சுமை இருந்துள்ளது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Nov-2024