மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
கிருஷ்ணகிரி, ஆடி அமாவாசையையொட்டி நேற்று, மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, அலங்காரம் செய்த உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ராசுவீதி, சேலம் சாலை, ரவுண்டானா வழியாக நகர் வலம் கொண்டு செல்லப்பட்டது.அதே போல், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையிலுள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில் மற்றும் மகாராஜகடை சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று, அம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.* கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி சிவாஜி நகரில் அமைந்துள்ள சுயம்பு மங்களகோட்டை மாரியம்மன் கோவில், 22ம் ஆண்டு ஆடி அமாவாசை உற்சவர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம், காட்டிநாயனப்பள்ளி காளியம்மன் கோவிலில் இருந்து, தாய் வீட்டு சீதனம் கோவிலுக்கு கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேக, பூஜை நடந்தது. நேற்று காலை, கணபதி ஹோமம், பெண்கள் பால்குடங்கள் மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதில் பக்தர்கள் அலகு குத்தியும், கிரேன் மூலம் முதுகில் அலகு குத்திக் கொண்டு தொங்கியவாறு, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மதியம், 3:00 மணிக்கு, அம்மன் நகர் வலமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதில், பெங்களூரு, ஓசூர், சேலம், வேலுார், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
19-Jul-2025