உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அப்துல் கலாம் பிறந்த நாள் நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி

அப்துல் கலாம் பிறந்த நாள் நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே., அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆசிரியர் உமா தலைமை வகித்தார்.ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட, வயதில் மூத்தவர்கள் மற்றும் ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, தொடக்கப்பள்ளி, பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் ஆகியோருக்கு, அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடை, சீருடை, கல்வி உபகரணங்கள் உள்பட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கார்த்திக் அகடாமி கார்த்திக் வெங்கடேசன், ஜோதி, ஷிவானி, செந்தமிழ் ஆதியா, அப்துல் கலாம் அகடாமி ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுரேஷ், லதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புடன் கூடிய பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஷப்ரின் தாஜ் வரவேற்றார். மாற்றுத்திறனாளி திருப்பதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை