பிரதமர் கல்வி உதவி தொகைக்கு சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025----26 ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பெற்றோரின் ஆண்டு வருவாய், 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும், 31 கடைசி தேதியாகும். கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, தேசிய கல்வி உதவித்தொகை https://scholorships.gov.inஇணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.