மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்ஓசூர், நவ. 7-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க.,வின் தளி வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில், கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், தளி மற்றும் அஞ்செட்டியில் தனித்தனியாக நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் ஜாகீர் உசேன், கணேஷ் தலைமை வகித்தனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினர். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபுவெங்கடாலசம், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் கந்தன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024