மேலும் செய்திகள்
பாரண்டப்பள்ளியில் வயல் தின விழா
23-May-2025
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் (அட்மா), வேப்பனஹள்ளி பகுதி விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம், வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் சிவநதி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.பர்கூர், நக்கல்பட்டி ஸ்ரீவிநாயகா கோலாட்ட, கும்மியாட்ட கிராமிய கலைக்குழுவினர், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், உங்களை தேடி வேளாண்மை, விவசாயிகளுக்கான தனி அடையாள எண், பிரதமரின் கவுரவ நிதி திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், சொட்டுநீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்மையம், விதை நேர்த்தி பயன்கள், கோடை உழவின் பயன்கள், அசோலா பயன்கள், பஞ்சகாவ்யா தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு பற்றி கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்தனர்.வேளாண் அலுவலர் ஜோதி, அரசு வழங்கும் மானியங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கவிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
23-May-2025