மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
13-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க.,வில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் வகையில், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி நேற்று வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார். சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி, பள்ளி குழந்தைகளுக்கு மடிக்கணினி, சைக்கிள், இப்படி எண்ணிலடங்காத திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாதந்தோறும் மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதாக கூறுகிறார்கள். இதன் மூலம் ஆண்டிற்கு, 12,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தினால், ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும், 12,000- ரூபாய் பெரிதா, ஒரு லட்சம் ரூபாய் பெரிதா என மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் மல்லையன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், மற்றும் சூளகிரி ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
13-Apr-2025