மேலும் செய்திகள்
ரூ.86.87 லட்சம் நலத்திட்ட உதவி
8 minutes ago
ஓடையில் முகாமிட்ட யானைகள் விரட்டிய வனத்துறையினர்
10 minutes ago
முத்துபிடாரி அம்மன் கோவில் திருவிழா
11 minutes ago
சிறுமி கர்ப்பம்: முதியவருக்கு போக்சோ
20 hour(s) ago
உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - ராயக்கோட்டை புதிய தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அலே-சீபம் பகுதியில், எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. அதற்காக, அங்கு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த, 5ம் தேதி இரவு, 9:45 மணிக்கு, மர்ம நபர்கள் மூன்று பேர், எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில், தனியார் நிலத்தின் அருகே அமர்ந்து மது அருந்தி உள்-ளனர்.இதை பார்த்த, எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளி-யான, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ்சிங், 55, என்பவர், அப்பகுதியில் அமர்ந்து மது அருந்த வேண்டாம் என்றும், குழாய்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூன்று பேரும், சுபாஷ்சிங்கை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம-டைந்த சுபாஷ்சிங், ஓசூர் தனியார் மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். உத்தனப்பள்ளி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
8 minutes ago
10 minutes ago
11 minutes ago
20 hour(s) ago