மேலும் செய்திகள்
ரூ.7.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
07-Dec-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அம்பேத்கர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கலெக்டர் சரயு தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:கல்வி, அரசியல் அதிகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காலம் காலமாக பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்-டையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமை-யையும் முன் வைத்தவர் அம்பேத்கர். அவரது நினைவு நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.பின்னர் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், 557 பேருக்கு, 8.12 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார். தொடர்ந்து கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் மதிய உணவு சாப்பிட்டனர்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்-குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், தாட்கோ பொது மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Dec-2024