உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்மன் கோவில் புனரமைப்பு: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

அம்மன் கோவில் புனரமைப்பு: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

பாகலுார், ஓசூர் அடுத்த பாகலுாரில், 200 ஆண்டு பழமையான கபாலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பு செய்ய, ஊர்மக்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து, மேள, தாளங்கள் முழங்க நேற்று காலை கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மாரியம்மன், கபாலியம்மன், மத்துாரம்மன், காவேரியம்மன், பில்லக்கம்மன் உற்சவ மூர்த்திகளை சுமந்து கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜை, ஹோமம் செய்யப்பட்டு, கோவில் புனரமைப்பு பணி துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !