உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் அங்கன்வாடி ஊழியர்கள் கைது

ஊத்தங்கரையில் அங்கன்வாடி ஊழியர்கள் கைது

ஊத்தங்கரை, நவ. 21-சென்னை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நடந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் பங்கேற்க, ஊத்தங்கரை சுற்றுவட்டார அங்கன்வாடி பள்ளிகளில் பணியாற்றும், 12 பெண்கள், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் டிராவல்ஸ் வாகனம் மூலம் சென்னை புறப்பட்டனர். ஒன்றிய தலைவர் சித்ரா தலைமையில், மாவட்ட பொருளாளர் சுஜாதா, துணைத்தலைவர் பழனியம்மாள் மற்றும் வள்ளி உள்பட, 12 பேர் சென்ற வாகனத்தை, ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் போலீசார் வழிமறித்து, அவர்களை கைது செய்தனர். அவர்களை, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின் இரவு, 12:30 மணியளவில் அவர்களை விடுதலை செய்தனர். இரவு நேரம் என்பதால், விடுதலையான பெண்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ