மேலும் செய்திகள்
ஊத்தங்கரை திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு
14-May-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி அருகில் உள்ள, முருக்கம்பள்ளம் கிராமம் திரவுபதி அம்மன் கோவிலில், 51ம் ஆண்டு அக்னி வசந்த உற்சவ மகாபாரத விழா கடந்த, 2ல் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் நடக்கும் விழாவில், மலையூர் ராமர் நாடக கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வருகிறது.இதில், கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், வில் வளைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டவன தகனம், சராசந்திரன் சண்டை, துயில், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம் ஆகிய நாடகங்கள் நடந்து வந்தன. இதில், கவுரவர்களை கூண்டோடு அழிக்க, சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற, அர்ச்சுணன், கோவில் முன்பாக அமைந்துள்ள தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு காட்டு மலர்களை கொண்டு சிறப்பு பூஜை செய்த பின், தபசு மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவு துவங்கி விடிய, விடிய நடந்த நிகழ்ச்சியை, முருகம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, மாதன குப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடு கொத்துார், மாதன குப்பம், மேல் அக்ரஹாரம் என, எட்டு கிராம மக்கள், அர்ச்சுணன் தபசு நாடகத்தை கண்டு களித்தனர். பின்னர் தபசு மரத்தின் மேல் இருந்து பூசாரி வீசிய பிரசாதத்தை, பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எட்டு கிராம தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.
14-May-2025