உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 4 கடைகளில் கொள்ளை முயற்சி

4 கடைகளில் கொள்ளை முயற்சி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு கொல்ல நாயக்கனுார் பிரிவு சாலையில், 4 கடைகள் உள்ளன. உரக்கடை, சப்ளையர் கடை, மளிகை கடை குடோன், ஹோட்டல் ஆகியவை உள்ளது. இந்த நான்கு கடைகளிலும் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, தொப்பி அணிந்து, 4 கடைகளிலும் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பணம் ஏதும் கிடைக்காததால், 'சிசிடிவி'யில் பொருத்திய டி.வி.,ஆர்களை எடுத்துச் சென்றுள்ளார். புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ