ஓசூர் கால்நடை பண்ணையில் நாளை ஏலம்
ஓசூர், ஓசூர் மத்திகிரியிலுள்ள அரசு கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட, 60 கால்நடைகள் நாளை பொது ஏலம் விடப்படுவதாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர், கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட, 50 மாடுகள், 10 பன்றிகள் என மொத்தம், 60 கால்நடைகள் நாளை (மே 15) காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, 10,000 ரூபாய்க்கு வங்கி வரைவோலையை பெற்று, கால்நடை பண்ணையில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று (மே 14) மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.முன்வைப்பு தொகையை, வங்கி வரைவோலையாக மட்டுமே வழங்க வேண்டும். பொதுஏலம் தொடர்பான கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04344 296832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். பொது ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விபரங்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் அனைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.