உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். இதில், தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மக்கள், தங்களை காப்பாற்றிக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு துறையை சார்ந்த சிறப்பு உபகரணங்களான பவர்ஷா, அயன் கட்டர், மூச்சுக்கருவி, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை கொண்டு எவ்வாறு கையாள்வது மற்றும் சமையல் எரிவாயு தீ விபத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் 25 கமாண்டோ வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை