பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்-நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் மாணவர் சுனில், 600க்கு, 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்-துள்ளார். அதே போல், பள்ளி அளவில் ராகுல்கவுசிக், 594 மதிப்-பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஸ்ரீபிரியா, 593 மதிப்-பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதே போல் திருப்பத்துார், வேப்பனஹள்ளி, சூளகிரி, தேன்க-னிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் செயல்-பட்டு வரும் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பர்-கூரில் பாராட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். இதில் வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.பி., தம்பி-துரை, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஜெயபால், வெற்றிச்-செல்வன், பள்ளி முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜலஜாக்சி, தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளி பொறுப்பாளர் யுவராஜ், வேளாங்கண்ணி பள்ளி குழுமங்களின் முதல்வர்கள் ராஜேந்திரன், அன்பழகன், விவேக், பூங்காவனம், டேனிஷ்ஜோசப், வினோத், ஹாசாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.