பைக் திருடியவர் கைது
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, மிட்டாநுாலஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 47. இவர் நுாலஹள்ளியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த, 15 அன்று அவருடைய பஜாஜ் டிஸ்கவர் பைக்கை வீட்டிற்கு முன், நிறுத்தி விட்டு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. கிருஷ்ணமூர்த்தி அதியமான்கோட்டை போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரித்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அப்பாவு, 42, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை மீட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.