உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஓசூர், டிச. 4-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் நாகராஜ் தன் பிறந்த நாளை, ஓசூரிலுள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று தன் மனைவியும், கவுன்சிலருமான பார்வதி மற்றும் மகன்கள் கிரண், கிஷோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், கேக் வெட்டி கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி, எம்.என்., நற்பணி மன்றம் சார்பில், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. எம்.என்., நற்பணி மன்ற தலைவர் பிரவீன்குமார் தலைமையில், நாகராஜிற்கு பிரமாண்ட பூ மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மொபைல்போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் முருகன், பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட தலைவர் வீரேந்திரன், எம்.என்., நற்பணி மன்ற துணைத்தலைவர் கோபிநாத், சத்தியகோபால், குணசேகர், லோகேஷ், மஞ்சு, பாபு, ரமேஷ் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை