உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., மாநில துணைத்தலைவர் அ.தி.மு.க., முனுசாமியுடன் சந்திப்பு

பா.ஜ., மாநில துணைத்தலைவர் அ.தி.மு.க., முனுசாமியுடன் சந்திப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ.,வை, பா.ஜ., மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மாவட்டம், ஒன்றியம் மற்றும் கிராம அளவில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., இணைந்து தேர்தல் பணியாற்றுவது குறித்து விவாதித்து வருகிறோம். அதன்படி முனுசாமியை இன்று, பா.ஜ., நிர்வாகிகளோடு சந்தித்து, 2026ல், தி.மு.க.,வை வீழ்த்துவது, மக்கள் பிரச்னையில் இரு கட்சிகளும் இணைந்து போராட்டங்களை நடத்துவது குறித்து விவாதித்தோம்,” என்றார்.அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை