மேலும் செய்திகள்
குடியிருப்போர் சங்க பொங்கல் விழா
18-Jan-2025
ஓசூர்: ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்கம், முனீஸ்வர் நகர் மற்றும் துவா-ரகா நகர் குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஜெயம் ஸ்பெஷாலிட்டி கிளினிக் ஆகியவை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து, ரத்த தானம் செய்த நுாற்றுக்கணக்கானோருக்கு, சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்-றுகளை வழங்கினார். டாக்டர்கள் செல்வக்குமார், பிரபாகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், அரிமா சங்க ரத்த வங்கி மூலம் ரத்தத்தை சேகரித்தனர். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், இம்பேக்ட் அரிமா சங்க தலைவர் மது, செயலாளர்கள் மணி, ஹரி, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் தலைவர் சூர்யபிரகாஷ், ராஜதுரை, நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Jan-2025