ரத்த அழுத்த தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்து. 2025ம் ஆண்டிற்கான உலக உயர் ரத்த அழுத்தம் தினத்தின் கருப்பொருளான, உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதை கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழ உயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.இதில், டாக்டர்கள் இளவரசன், சதீஸ்குமார், தேவிகா, சுபாசினி, பிரபா, நர்ஸ் கண்காணிப்பாளர் விஜியா, நர்ஸ்கள் சாமுண்டிஸ்வரி, தனலட்சுமி, நம்பிக்கை மைய ஆலோசகர் காயத்திரி, சேரலாதன், ஆய்வக நுட்புனர் பாட்ஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.