உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் புத்தக கண்காட்சி

ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் புத்தக கண்காட்சி

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், 2 நாள் புத்தக கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், மாணவ, மாணவியருடன் இணைந்து திறந்து வைத்தார். தலைமை நுாலகர் ரூபிநந்தினி மற்றும் நுாலக பணியாளர்களின் உழைப்பை பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். கண்காட்சியில், 4 பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனையாளர்கள், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிப்படுத்தினர்.கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், புதிய கல்வி வளங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு தொகுப்புகள் போன்றவற்றை ஆராய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்ததாக குறிப்பிட்டார். 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லுாரி மேலாளர் நாராயணன் மற்றும் துறை தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ