மேலும் செய்திகள்
மனுக்களுக்கு தீர்வு கண்டால் மக்கள் மனம் குளிரும்
01-Jul-2025
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கொம்மேப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஓபேபாளையம் கிராமத்தையொட்டி அரசு புறம்போக்கு நிலத்தில், 25 மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா, சாலை, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, ஓராண்டுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. மக்கள் சென்று வர மண் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் தார்ச்சாலை அமைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காமல் இருந்த நிலையில், சூளகிரி ஒன்றிய நிர்வாகம் மூலம், நேற்று போர்வெல் அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
01-Jul-2025