துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
கிருஷ்ணகிரி: திருவள்ளூர் மாவட்டம், போலிவாக்கத்தில் நேற்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்.,களில் பணிபுரியும் துாய்மை பணி-யாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்-டத்தை விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, கிருஷ்ணகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கிருஷ்ணகிரி நகராட்சி துாய்மை பணியாளர்க-ளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர். கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும், 330 துாய்மை பணியாளர்கள், ஊழியர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் கூறியதா-வது:மாவட்டத்தில் இத்திட்டத்தில், ஓசூர் மாநகராட்சி யில், 1,354 துாய்மை பணியாளர்கள், கிருஷ்ண-கிரி நகராட்சி - 330, பர்கூர் டவுன் பஞ், - 66, தேன்-கனிக்கோட்டை டவுன் பஞ்., - 87, காவேரிப்பட்-டணம் டவுன் பஞ்., - 52, கெலமங்கலம் டவுன் பஞ்., - 43 நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., - 33 மற்றும் ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல், 63 பேர் என, மாவட்டம் முழுவதும், 2,028 துாய்மை பணியா-ளர்கள் பயனடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலு-மணி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ஓசூர் கே.ஏ.பி., திருமண மண்டபத்தில், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் கவுன்சி-லர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவுகளை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மாநகர அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மோசின்தாஜ், ராதா, லட்சுமி, பெருமாயி உட்பட பலர் பங்கேற்றனர். * ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், திட்டப் பணிகள் பொறி-யாளர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.