உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜி.ஹெச்.,ல் தாய்ப்பால் வாரவிழா

ஜி.ஹெச்.,ல் தாய்ப்பால் வாரவிழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். மகப்பேறு மருத்துவர் பிரபா முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையுடன் உள்ள தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. பிரசவித்த தாய்மார்களுக்கு பரிசுகள், குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை, ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் பிரபாவதி, நித்யா மோகன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.இதில், செவிலியர்கள் அலமேலு, கனிமொழி, நம்பிக்கை மைய ஆலோசகர் காயத்ரி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா வரவேற்றார். சேரலாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை