உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அக்காவின் ஆவணங்களை தீயிட்டு எரித்த தம்பி கைது

அக்காவின் ஆவணங்களை தீயிட்டு எரித்த தம்பி கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி அடுத்த கொல்லஹள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 44. இவருக்கும், இவரது தம்பி ஆறுமுகம், 40 என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், பொதுவான விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தகராறில், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய மகேஸ்வரிக்கும், ஆறுமுகத்தின் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அங்கு வந்த ஆறுமுகம் மகேஸ்வரியை தாக்கி, அவரது வீட்டிற்குள் நுழைந்து அடையாள அட்டைகளுக்கு தீ வைத்தார். இது குறித்து மகேஸ்வரி மகாராஜகடை போலீசில் அளித்த புகார்படி, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை