சூளகிரியில் பஸ்கள் இரவில் நின்று செல்ல நடவடிக்கை
கிருஷ்ணகிரி, சூளகிரிலிருந்து நாள்தோறும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பலரும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். அவர்கள் இரவில் ஊருக்கு திரும்ப போதிய பஸ் வசதி இல்லை என்றும், சூளகிரி வழியாக செல்லும் பஸ்களிலும், பயணிகளை இரவு நேரத்தில் ஏற்றுவதில்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் அப்பகுதி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, சேலம் கோட்ட மேலாளர் மற்றும் தர்மபுரி மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், “வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் பஸ்கள் இரவு நேரங்களில் நின்று செல்வதில்லை என, சமூக வலைதளங்களில் வந்த செய்தி தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உரிய நடவடிக்கைக்கு அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,” என்றார்.