உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

கிருஷ்ணகிரி, ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.உலக உணவு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. 6 முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சிறுதானியங்களை கொண்டு தாங்கள் தயாரித்த உணவு பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில், நவதானிய பொரியல், சிறுதானிய அடை, முருங்கைக்கீரை அவியல், கம்பு கூழ், வரகு புட்டு, களி, முளைகட்டிய தானியங்கள், அதிரசம், கொழுக்கட்டை என மொத்தம், 250க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை காட்சியில் வைத்திருந்தனர். உணவு திருவிழா துவக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்குமார் உணவு திருவிழாவை துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பீமா பாய் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை