உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்களுக்கான தோழி விடுதி காணொலியில் முதல்வர் திறப்பு

பெண்களுக்கான தோழி விடுதி காணொலியில் முதல்வர் திறப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, விஸ்வநாதபுரத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், 12.37 கோடி ரூபாய் மதிப்பில், தோழி தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் படிக்கும் மாணவியர் என, 166 பேர் பாதுகாப்பாக தங்கும் வகையில், 59 அறைகளுடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு இருவர் மற்றும் 4 பேர் தங்கும் அறைகள் உள்ளன. இருவர் தங்கும் அறைக்கு தலா, 6,500 ரூபாய், 4 பேர் தங்கும் அறைக்கு தலா, 4,500 ரூபாய் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம், தோழி விடுதியை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.விடுதியில், காவலாளிகள், 'சிசிடிவி' கேமரா, பயோமெட்ரிக் உள்நுழைவு, இலவச இணைய வசதி, அயனிங், சலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பார்க்கிங், உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தங்க விரும்பும் பெண்கள், www.tnwwhcl.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 94999 00889 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ