கழிவுநீர் குழிக்குள் தவறி விழுந்த குழந்தை சாவு
பாகலுார்: பீஹாரை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார், 29. இவரது மனைவி சுனைனா, 25. இவர்களுக்கு ஆதித்யகுமார் என்ற, ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே ஈச்சங்கூரிலுள்ள, இளங்கோவன் என்பவரது கால்நடை பண்ணையில் குடும்பத்துடன் தங்கி, ஜிதேந்திரகுமார் பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் காலை, 7:45 மணிக்கு, கால்நடை பண்-ணையில் உள்ள, 2 அடி ஆழ, கழிவு நீர் குழி அருகே குழந்தை ஆதித்யகுமார் விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் தேடியபோது, அப்பகுதியிலுள்ள கழிவுநீர் குழிக்குள் தலைகுப்புற விழுந்து குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாகலுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.