பட்டாசு வெடித்த தகராறில் மோதல்; 7 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, மோகன்ராவ் காலனியை சேர்ந்தவர் கணேசன், அ.தி.மு.க., பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் முன் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கு சென்ற அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக், பட்டாசு வெடிப்பதை நிறுத்தக்கூறி தகராறு செய்துள்ளார். கணேசனும் பதிலுக்கு திட்டியுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதையடுத்து கார்த்திக், அ.தி.மு.க., ஆட்டோ சங்க மாவட்ட தலைவரான சிவக்குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர், தன் தரப்பிலிருந்து சிலரை அனுப்பியுள்ளார். அப்போது இரு தரப்பி னருக்கும் மோதல் வலுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த டவுன் போலீசார், அவர்களை கலைத்து, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், மருத்துவம னைக்கு செல்லும் வழியி லும், இரு தரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர் களை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சமா தானப்படுத்தி அனுப்பினர். இதில், பலர் மது போதையில் இருந்ததால், போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.இந்நிலையில், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார், 4 பேர் மீதும், தாலுகா போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.