உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சேவல் சண்டை; 2 பேர் கைது

சேவல் சண்டை; 2 பேர் கைது

பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., பயாஸ் மற்றும் போலீசார், பி.கொல்லப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள சீனப்பா என்பவரது நிலத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்த சிலர் தப்பியோடினர். இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். விசாரித்த போது, பி.கொல்லப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 40, கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலுாரை சேர்ந்த நாராயணப்பா, 51, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ