உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போகனப்பள்ளி கிராமத்தில் தென்னை தழைக்கூளம் பயிற்சி

போகனப்பள்ளி கிராமத்தில் தென்னை தழைக்கூளம் பயிற்சி

கிருஷ்ணகிரி: ஓசூர், அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, இறுதியாண்டு மாணவியர், தங்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தங்கி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி போகனப்பள்ளி கிராமத்தில், தென்னை தழைக்கூளம் பற்றிய வழிமுறைகளை பயிற்சி அளித்தனர். இதில், தழைக்கூளம் என்பது மண்ணின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் பொருளின் ஒரு அடுக்கு. மண்ணின் மேற்பரப்பில், 50 செ.மீ., மூடுவதன் மூலம் மண் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான வேர் செயல்பாட்டிற்கு அவசியமானது. தழைக்கூளம் பயன்படுத்துவதற்கான காரணங்கள், மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாத்தல், மண்ணின் வளம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், களைகளின் வளர்ச்சியை குறைத்தல் மற்றும் அப்பகுதியின் பார்வை கவர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். தென்னைமட்டை வேர் ஊடகமாக செயல்பட்டு, வேர்கள் மண்ணிலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வேர் ஊடகம், வேர்களின் வளர்ச்சியை துாண்டுவதோடு, தாவரத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. இது குறித்து, அக்கிராம விவசாயிகள் தெரிந்து கொண்டு, தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ