உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கம்யூ., - வி.சி.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கம்யூ., - வி.சி.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: வணிக சமையல் காஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அரு‍கே, இ.கம்யூ., - மா.கம்யூ., மற்றும் வி.சி.க., சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் காஸ் விலை உயர்வால், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே வணிக சமையல் காஸ் விலை உயர்வை, மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில்வே துறையில், 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில், 4 லட்சம் காலிப்பணியிடங்களை கைவிடும், மத்திய அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம் என, கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !