உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மரில் ரூ.3.50 லட்சம் காப்பர் கம்பி, ஆயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரில் ரூ.3.50 லட்சம் காப்பர் கம்பி, ஆயில் திருட்டு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு டிரான்ஸ்பார்மரில் மின்தடை ஏற்படுத்திய மர்ம நபர்கள், டிரான்ஸ்பார்மரை உடைத்து கீழே தள்ளி, அதற்குள் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் 200 லிட்டர் ஆயிலை திருடிச் சென்றனர். இதனால், தண்டரை பகுதியில் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டது. மாற்று ஏற்பாடு மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டது. தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், டிரான்ஸ்பார்மர்களில் இருந்து அடிக்கடி ஆயில், காப்பர் கம்பிகள் திருடப்படுகின்றன. இதனால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதுடன், மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !