மேலும் செய்திகள்
ஆன்லைன் மூலம் தொழிற்சாலை உரிமம்
16-Oct-2024
தொழில் உரிமத்தை புதுப்பிக்கமாநகராட்சி கமிஷனர் உத்தரவுஓசூர், நவ. 5-ஓசூர், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1988 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி, 2023ன் படி, ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், உரிய கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும். எனவே, தொழில் உரிமம் பெற்ற, அனைத்து வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், http//:tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம், மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தொழில் உரிம கட்டணத்தை செலுத்தி, தொழில் உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
16-Oct-2024