உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

அஞ்செட்டி, அஞ்செட்டி அருகே, கள்ளக்காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே குட்டேனி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன், 42. இவரது மனைவி நாகம்மா. இவர்களுக்கு, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தொட்டமஞ்சு அருகே தொட்டூரை சேர்ந்தவர் மாதேஷ், 35. இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். கட்டட வேலைக்கு சென்றபோது பழகிய, நாகம்மாவிற்கும், மாதேஷிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மாதப்பனுக்கு தெரியவந்தது.கடந்த மாதம், 30ம் தேதி காலை, 9:00 மணிக்கு, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற நாகம்மா, அங்கு செல்லவில்லை. அதே நாளில் வீட்டிலிருந்து சென்ற மாதேஷ் திரும்பி வரவில்லை.இரு வீட்டாரும் தேடி வந்த நிலையில், தொட்டமஞ்சு அருகே பெல்லட்டி வனப்பகுதியில், துாக்கிட்ட நிலையில் கடந்த, 18ம் தேதி, அழுகிய நிலையில் மாதேஷ் சடலம் மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் மாதேஷ் தற்கொலை செய்த இடம் அருகே, உறவினர்கள் தேடி பார்த்தனர்.அங்கிருந்து, 100 மீட்டர் துாரத்தில், அழுகிய நிலையில் நாகம்மா துாக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். கள்ளக்காதல் வீட்டிற்கு தெரிந்ததால், இருவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி