உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 30 ஆண்டுகளாக வீடு முழுவதும் கொலு வைத்து அசத்தி வரும் தம்பதியர்

30 ஆண்டுகளாக வீடு முழுவதும் கொலு வைத்து அசத்தி வரும் தம்பதியர்

கிருஷ்ணகிரி, கடந்த, 30 ஆண்டுகளாக வீடு முழுவதும் தம்பதியர் கொலு வைத்துள்ளதை, பொதுமக்கள் நேரில் சென்று பார்த்து வியக்கின்றனர்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சத்ரபதி சிவாஜி நகர், அம்பேத்கர் காலனி, 2வது தெருவில் வசித்து வருவோர் ஜெயேந்திரன் - சோனாபாய் தம்பதியர். இவர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக கொலு வைத்து வருகின்றனர். கொலு என்றால் மற்றவர்களை போல், 3 அல்லது 5 படி என்றில்லாமல், வீட்டில் உள்ள சமையல் அறை, ஒரு படுக்கை அறையை விட்டுவிட்டு வரவேற்பு அறை, பெரிய ஹால், இரண்டு படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் கொலு பொம்மைகள் மற்றும் சுவாமி சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். இவற்றை தினமும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.இது குறித்து தம்பதியர் கூறியதாவது: எங்கள் முன்னோர்களின் வழியில், நாங்கள் கொலு வைத்து வருகிறோம். இதில் ரங்கநாதர், கைலாயம், பாண்டுரங்கர், முப்பெரும் தேவியர், குபேரன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நவக்கிரக நாயகி மற்றும் சிந்துார் ஆப்ரேஷன் என, 50க்கும் மேற்பட்ட கொலு செட்களை வைத்துள்ளோம். இங்கு வைத்துள்ள சுவாமிகளுக்கு காலை, மாலை சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை, 9 நாட்களும் நடக்கிறது. அதுமட்டுமின்றி, மாலையில், 2 முதல், 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு கன்னிகா பூஜை செய்கிறோம். இவற்றை ஏராளமானோர் நேரில் வந்து பார்த்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை