உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புரட்டாசிக்கு முந்தைய ஞாயிறு இறைச்சி கடைகளில் கூட்டம்

புரட்டாசிக்கு முந்தைய ஞாயிறு இறைச்சி கடைகளில் கூட்டம்

கிருஷ்ணகிரி:புரட்டாசி மாதம் நாளை மறுநாள், 17ம் தேதி துவங்குகிறது. பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில், பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, பெருமாளுக்கு விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இம் மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்பது வழக்கம். புரட்டாசி மாதம் துவங்க, 2 நாட்களே உள்ள நிலையில், புரட்டாசி மாதத்திற்கு முன்பு வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று, கிருஷ்ணகிரி பழையபேட்டை மீன் மார்க்கெட், இறைச்சிக்கடைகள், ராயக்கோட்டை சாலையிலுள்ள கடல்மீன் விற்பனைக் கடைகள் மற்றும் புதுப்பேட்டையில் உள்ள இறைச்சிக் கடைகள் என அனைத்து இடங்களிலும் இறைச்சி மற்றும் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது.* அரூரிலுள்ள இறைச்சி கடைகளில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவைகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கம்பைநல்லுார், கே.ஈச்சம்பாடி, அச்சல்வாடி, நரிப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும், இறைச்சி கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை