உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெங்கவல்லியில் சூறாவளி காற்று மக்காச்சோளம், வாழை சேதம்

கெங்கவல்லியில் சூறாவளி காற்று மக்காச்சோளம், வாழை சேதம்

கெங்கவல்லி:கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில், கெங்கவல்லி, வலசக்கல்பட்டி, நடுவலுார், இலுப்பைதோப்பு பகுதியில் சாகுபடி செய்திருந்த வாழை, மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்தது. நடுவலுார், பள்ளக்காடு விவசாயி தங்கராசு, 50, என்பவரது தோட்டத்தில், 2 ஏக்கர் வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தது.அதேபோல், இலுப்பைதோப்பு விவசாயி ராஜவேல், 52, என்பவரது தோட்டத்தில் அறுவடை நிலையில் இருந்த ஒன்றரை ஏக்கர் வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தது. வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நேற்று, பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கெங்கவல்லி பகுதியில், 500 ஏக்கர் மக்காச்சோளம், 25 ஏக்கர் வாழை பயிர் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு, நிவாரணம் வழங்கிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சேலத்தில், 39.6 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. இது இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகம். அதாவது, 103.3 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்நிலையில், இரவில் பலத்த காற்று வீசிய நிலையில், இடி-மின்னலுடன் கூடிய மழை, மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கெங்கவல்லியில், 58 மி.மீ., மழை பதிவானது. தம்மம்பட்டியில், 48, ஏற்காடு, 28.6, மேட்டூர், 18.2, வீரகனுார், 18, ஆணைமடுவு, 13, நத்தக்கரை, 12, ஒமலுார், 5.2, டேனிஷ்பேட்டை, 4.5, சேலம், 3.6, ஆத்துார், கரியகோவிலில் தலா, 3 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை