மேலும் செய்திகள்
மொபட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு
09-Sep-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, பரசனேரியில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து தற்போது ஏரியில் இருந்த மீன்கள் முழுவதுமாக செத்து மிதந்து வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, திருப்பத்துார் செல்லும் சாலையில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரியில் செத்து மிதக்கும், லட்ச கணக்கான மீன்களால் ஒப்பந்ததாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது
09-Sep-2025