மண்புழு உரம் தயாரிக்க செயல்விளக்க பயிற்சி
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண் துறை சார்பில், மாதரசனப்பள்ளி கிரா-மத்தில், மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுா-ரியின் இளமறிவியல், 4ம் ஆண்டு மாணவியர், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்-பித்தனர். அப்போது, சாணம், இழை, தழை போன்ற மக்கும் கழிவுகளை மண்புழுக்கள் உண்டு, செரித்து, ஊட்டச்சத்து நிறைந்த சிறு உருண்டைகளாக வெளியேற்றுவது தான் மண்-புழு உரமாகும், என விளக்கமளித்தனர்.