உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி - திருத்தணிக்கு காவடியுடன் சென்ற பக்தர்கள்

போச்சம்பள்ளி - திருத்தணிக்கு காவடியுடன் சென்ற பக்தர்கள்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, குள்ளனுார் சுற்று வட்டாரத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினரில், வீட்டுக்கு ஒருவர், போச்சம்பள்ளி, குள்ளனுாரில் உள்ள முருகர் கோவிலில் பம்பை, உடுக்கை, மேள முழக்கத்தில் அருள் வந்து சுவாமி ஆடி மயில், பூங்காவடிகள் ஏந்தியும், 10, 20, 30 அடி நீள அலகு குத்தியும், முருகர் கோவிலை வலம் வந்தனர். மயில், பூங்காவடிகளை ஏந்திய, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள், குள்ளனுாரிலிருந்து நடைபயணமாக புறப்பட்டனர். வரும், 14-ல் பரணி கிருத்திகை அன்று, திருத்தணியில் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பின், 15-ல் ஆடி கிருத்திகை அன்று குள்ளனுாரிலுள்ள முருகர் கோவிலில் தேர் இழுத்து ஆடி விரதத்தை முடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ