பொது அமைதிக்கு குந்தகம்: தொழிலாளி இருவர் கைது
ஓசூர்: தளி எஸ்.ஐ., ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு ஓட்டல் முன், கூலித்தொழிலாளிகளான தளியை சேர்ந்த நாராயணா, 42, சின்ன உப்பனுாரை சேர்ந்த ரமேஷ், 41, ஆகியோர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் செல்லாததால், இருவரையும் தளி போலீசார் கைது செய்தனர்.