உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்து, உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர செயலாளர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி