உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொடி கம்பம் அகற்றிய தி.மு.க., நிர்வாகி பலி

கொடி கம்பம் அகற்றிய தி.மு.க., நிர்வாகி பலி

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து, அக்கட்சி நிர்வாகி பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பஞ்., கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 50. அப்பகுதி தி.மு.க., கிளை செயலர். தலைமை உத்தரவுபடி, அப்பகுதியில் பொது இடத்தில் இருந்த தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில், தி.மு.க.,வினர் நேற்று காலை, 8:30 மணிக்கு ஈடுபட்டனர். அப்போது, கொடிக்கம்பம் மேல‍ே சென்ற மின் கம்பி மீது சாய்ந்து, அதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், ராமமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 58, பெருமாள், 46, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், 50, சர்க்கரை, 55, ஆகியோர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., பலியான ராமமூர்த்தி குடும்பத்திற்க்கு, 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ