உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சூளகிரி: சூளகிரி அடுத்த புக்கசாகரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. தி.மு.க., வர்த்தக அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், தலைமை செயற்-குழு உறுப்பினர் வீராரெட்டி முன்னிலை வகித்தனர்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து, அவரது முன்னிலையில், புக்கசாகரம் பஞ்., உட்பட்ட அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா,.ஜ., உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி துண்டுகளை அணிவித்து, எம்.எல்.ஏ., பிரகாஷ் வர-வேற்றார். சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ், வேப்பன-ஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை